0
ரணில் விக்கிரமசிங்க 24 மாதங்களில் 25 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டிருந்தார் என வெகுசன ஊடக மற்றும் சுகாதார அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இன்று சபையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பயணங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பட்டுள்ளது. இதனை அறிவிப்பதற்கு எமக்கு கால அவகாசம் வேண்டும்.
ஏன் எனில் ரணில் விக்கிரமசிங்க 24 மாதங்களில் 25 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார்.
எனவே ரணில் மேற்கொண்ட ஒவ்வொரு விஜயம் தொடர்பாக நாம் வெவ்வேறாகவே பார்க்கவேண்டும்.
எனவே இதனை சபைக்கு அறிவிப்பதற்கு பிரதமர் இரண்டு வாரகால அவகாசத்தை கோரியுள்ளார்.
அதன் பின்னர் சபைக்கு அறிவிக்கப்படும்” இவ்வாறு நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.