3
யாழில். தோட்ட கிணற்றில் இருந்து தொப்புள் கொடியுடன் சிசுவின் சடலம் மீட்பு
யாழ்ப்பாணத்தில் தோட்ட கிணறொன்றில் இருந்து தொப்புள் கொடியுடன் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கைத்தடி பகுதியில் உள்ள தோட்ட கிணறொன்றில் இருந்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தோட்டத்திற்கு சென்ற விவசாயிகள் கிணற்றினுள் சிசு ஒன்றின் சடலம் மிதப்பதாக அறிவித்ததை அடுத்து , சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு, வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாகவும் , தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.