3
யாழ்ப்பாணத்தில் தோட்ட கிணறொன்றில் இருந்து தொப்புள் கொடியுடன் சிசுவின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. கைத்தடி பகுதியில் உள்ள தோட்ட கிணறொன்றில் இருந்து இன்று குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தோட்டத்திற்கு சென்ற விவசாயிகள் கிணற்றினுள் சிசு ஒன்றின் சடலம் மிதப்பதாக அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சிசுவின் சடலத்தை மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Related
Tags: Jaffnaயாழ்ப்பாணம்