தோட்டக் கிணற்றில் இருந்து சிசுவின் சடலம் மீட்பு – மூவர் கைது !

by 9vbzz1

தோட்டக் கிணற்றில் இருந்து சிசுவின் சடலம் மீட்பு – மூவர் கைது ! on Tuesday, January 21, 2025

யாழ்ப்பாணத்தில் தோட்ட கிணறொன்றில் இருந்து தொப்புள் கொடியுடன் சிசுவின் சடலமொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சிசுவின் தாய் உட்பட மூவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம், கைத்தடி பகுதியில் உள்ள தோட்ட கிணறொன்றில் இருந்து இன்று காலை தொப்புள் கொடியுடன் சிசுவொன்றின் சடலம் மிதப்பதாக விவசாயிகள் சிலர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சிசுவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில் சிசுவை பிரசவித்தவர் என சந்தேகிக்கப்படும் 43வயதான 3பிள்ளைகளின் தாய், கிளிநொச்சி பகுதிக்கு தப்பிச்செல்ல முற்பட்ட வேளை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார் எனவும், அவருடன் அப் பெண்ணின் தாய் மற்றும் சகோதரியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்