தினமும் 145 நிமிடங்கள் டெல்லி விமான நிலையத்தை மூடத் தீர்மானம்

by adminDev2

இந்தியாவின்  76 வது குடியரசுத் தினம் எதிர் வரும் 26 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் குடியரசுத்  தினத்தை முன்னிட்டு வரும் 26 ஆம் திகதி வரை  டெல்லி விமான நிலையத்தை தினமும் 2 மணி நேரம் 25 நிமிடங்களுக்கு மூடத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக 8 நாட்களில் குறைந்தது 1,336 விமானங்களின் சேவைகள் பாதிக்கப்படும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: இந்தியக் குடியரசு தினம்டெல்லி

தொடர்புடைய செய்திகள்