இரு அமெரிக்கர்களுக்கு ஈடாக காவலில் இருந்த ஆப்கான் கைதி விடுவிப்பு!

by smngrx01

இரண்டு அமெரிக்கக் குடிமக்களுக்கு ஈடாக அமெரிக்கக் காவலில் உள்ள ஒரு ஆப்கான் கைதி விடுவிக்கப்பட்டதாக காபூல் வெளிவிவகார அமைச்சகம் செவ்வாயன்று (21) அறிவித்தது.

விடுவிக்கப்பட்ட கான் மொஹமட் என்ற ஆப்கானிஸ்தான் குடிமகன், போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு அமெரிக்க நீதிமன்றங்களின் உத்தரவுக்கு அமைய ஆயுள் தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கலிபோர்னியா மாநிலத்தில் தண்டனை அனுபவித்து வந்தவர் ஆவார்.

அவர் ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான நங்கர்ஹரில் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதனிடையே, தலிபான் நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், இரண்டு அமெரிக்கர்கள் விடுவிக்கப்பட்டதை உறுதிப்படுத்தினார், ஆனால் அவர்களை அடையாளத்தை வெளிப்படுத்த அவர் மறுத்து விட்டார்.

தொடர்புடைய செய்திகள்