அஸ்வெசும நிவாரண திட்டத்தினை மீள்பரிசீலனை செய்ய அரசாங்கம் நடவடிக்கை!

by adminDev2

பொதுமக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்வதாக பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே  பிரதி அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதேவேளை அஸ்வெசும நிவாரண திட்டத்தினை மீள்பரிசீலனை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”அஸ்வெசும கொடுப்பனவை பெறுவதற்கு தகுதியிருந்தும் சிலருக்கு அதன்பயன்பாடுகள் கிடைக்கப்பெறவில்லை. அது தொடர்பில் நாம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளோம். தகுதியுடையவர்கள் அனைவரும் இந்த திட்டத்திற்குள் உள்வாங்கப்படுவார்கள்.

கடந்த 2024 ஆம் ஆண்டை விட 2025 ஆம் ஆண்டில் அதிக பயனாளர்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு வழங்குவதற்கு எதிர்ப்பார்த்துள்ளோம். ஏற்கனவே பெறப்பட்டுள்ள தரவுககள் மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு தகுதியுடைய அனைவருக்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்படும்.

அஸ்வெசும பயனாளர்களின் பிள்ளைகளுக்காக 6,000 ரூபா கொடுப்பனவு வழங்கும் திட்டத்தின் கீழ் பெருமளவானவர்கள் பயன்பெற்றுள்ளனர்.அஸ்வெசும கொடுப்பனவு திட்டத்தில் உள்வாங்கப்படாதவர்களின் பிள்ளைகளுக்கும் இந்த உதவி திட்டத்தினை வழங்குவதற்கு எதிர்ப்பார்த்துள்ளோம்” இவ்வாறு ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்