1
அர்ச்சுனா எம்.பியை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு ! on Tuesday, January 21, 2025
யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு அனுராதபுர நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அனுராதபுர போக்குவரத்து பொலிஸாருக்கு இடையூறு ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில், நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்ததை அடுத்தே சந்தேக நபரை கைது செய்து, சட்டப் பிரகாரம் நடவடிக்கை எடுக்குமாறும், விசாரணைகள் தொடர்பான மேலதிக விபரங்களை, பெப்ரவரி 3 ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் அறிவிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
You may like these posts அரசியல்