போதை மாத்திரைகளுடன் 27 வயதுடைய இளைஞன் கைது !

by adminDev

on Tuesday, January 21, 2025

அநுராதபுரம், மதவாச்சி, வஹமல்கொல்லேவ பிரதேசத்தில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று திங்கட்கிழமை (20) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அநுராதபுரம் பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடைய இளைஞன் ஆவார். சந்தேக நபரிடமிருந்து 30 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மதவாச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்