3
எதிரே வரும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக வாகனத்தை செலுத்திய குற்றச்சாட்டில் வாகனத்தை தடுத்து நிறுத்திய போக்குவரத்து பிரிவு பொலிசரின் கடமைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் இடையூறு விளைவித்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே. புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
அதேவேளை இராமநாதன் அர்ச்சுனா வெளியிட்ட கருத்துகள் இனங்களுக்கு இடையில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையிலானதா எனவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து சட்டம், தண்டனைக் கோவைச் சட்டங்களின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் மீது நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்து, மேலதிக சட்ட நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுக்கவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.