இன்று கூடும் நாடாளுமன்றம்!

by wp_fhdn

நாடாளுமன்றம் இன்று (21) காலை 09.30 மணிக்கு சபாநாயகர் கலாநிதி விக்கிரமரத்ன தலைமையில் கூடவுள்ளது.

க்ளீன் ஸ்ரீலங்கா திட்டம் தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீர குறிப்பிட்டுள்ளார்.

வரும் வியாழன் அன்று, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடு சட்டத்தின் கீழ் உள்ள விதிமுறைகள், மூலோபாய மேம்பாட்டு திட்ட சட்டம், துறைமுகம் மற்றும் விமான நிலைய மேம்பாட்டு வரி சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் விவாதிக்கப்படும்.

மறைந்த முன்னாள் எம்.பி.க்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் வெள்ளிக்கிழமை முழு நாளும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்