மருதமுனை பாண்டிருப்பு பகுதிகளில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமைகள் !

by smngrx01

மருதமுனை பாண்டிருப்பு பகுதிகளில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமைகள் ! on Monday, January 20, 2025

அம்பாறை மாவட்டம் மருதமுனை-பாண்டிருப்பு இடைப்பட்ட பகுதிகளில் இரண்டு பெரிய கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

கடற்கரைக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் இன்று உயிரிழந்த நிலையில் ஆமைகள் கரை ஒதுங்கியுள்ளதை அவதானித்துள்ளனர்.

இவ்வாறு கரையொதுங்கியுள்ள இரண்டு கடலாமைகளும் சுமார் 3 அடி நீளமும் 25 தொடக்கம் 50 கிலோ கிராம் எடை கொண்டதாகும் எனவும் ஆழ் கடலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக கடலாமைகள் கரையொதுங்கி வருவதாக அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த கடலாமைகள் இரண்டும் ஒலிவ் வகையைச் சார்ந்தது என தெரிவிக்கப்படுகிறது.இதே போன்று கடந்த வாரமும் பெரிய நீலாவணை பகுதியிலும் பெரிய கடலாமையொன்று இறந்த நிலையில் கரையொதுங்கி இருந்தது

மேலும் இம்மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் அண்மையில் கடலாமைகள் டொல்பின்கள் உயிரிழந்த நிலையில் கரையொதிங்கியிருந்தமை சமூக ஊடகங்களிலும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்