காணொளிக் குறிப்பு, அதிதி அசோக் – மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற முதல் இந்திய பெண் கோல்ஃப் வீராங்கனை

3 ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்தியாவின் முதல் கோல்ஃப் வீராங்கனை – யார் இவர்?

அதிதி அசோக் – 26 வயதாகும் இவர் பெண்கள் கோல்ஃப் விளையாட்டில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார். தொடர்ந்து மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் தேர்வான முதல் இந்திய கோல்ஃப் வீராங்கனை ஆவார்.

18 வயதில், 2016 ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய இளம் கோல்ப் வீரர்களில் ஒருவர். 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் நான்காவது இடத்தைப் பிடித்து பதக்கத்தை தவறவிட்டாலும், அதுவே கோல்ஃப் விளையாட்டில் இதுவரை இந்தியாவின் சிறப்பான ஆட்டமாகும்.

2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இருப்பினும், 2024 இல் தனது மூன்றாவது ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். லேடீஸ் ஐரோப்பிய டூர்(LET) போட்டிகளில் ஐந்து முறை வெற்றி பெற்ற முதல் இந்தியர் ஆவார். மதிப்புமிக்க அர்ஜுனா விருது பெற்றுள்ள அதிதி, இந்தியாவில் பெண்கள் கோல்ஃப் விளையாட்டில் மிளிர்ந்து வருகிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.