3
ஓடும்போதே பற்றி எரிந்த ரயில் : அச்சத்தில் பயணிகள் பெலியத்தயில் இருந்து கண்டி நோக்கிச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலின் இயந்திரம் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளதால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
எண்டெரமுல்ல ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று மாலை (20) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் இயந்திரம் தீப்பிடித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் குறித்த ரயிலில் பயணித்த பயணிகள் அச்சமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன