ரயில் ஈ-டிக்கெட் மாஃபியா குறித்து சிஐடி விசாரணை ! on Monday, January 20, 2025
ரயில்வே திணைக்களத்தால் ஒன்லைனில் வழங்கப்பட்ட டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்பனை செய்த சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (20) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
ரயில்வே திணைக்களம் அளித்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொபிடெல் நிறுவனத்துடன் இணைந்து ஒன்லைனில் டிக்கெட்டுகளை விற்பனை செய்யும் திட்டத்தை ரயில்வே திணைக்களம் செயல்படுத்தி வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் அறிக்கையிட்டுள்ளது.
குறுகிய நேரத்தில் ஒன்லைனில் டிக்கெட்டுகளைப் பெற்று அவை அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், அது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணை பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு, நீதிமன்றத்திற்கு அறிக்கையிடப்படும் எனவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது