சிவனொளிபாத மலைக்குச் சென்றிருந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு ! on Monday, January 20, 2025
சிவனொளிபாத மலையை கண்டுகளிப்பதற்காக நல்லதண்ணி – சிவனொளிபாத மலை வீதியில் சென்றிருந்த வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (20) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த 67 வயதுடையவர் ஆவார்.
வெளிநாட்டுப் பிரஜை சிவனொளிபாத மலையை கண்டுகளிப்பதற்காக தனது குடும்பத்தினருடன் நல்லதண்ணி – சிவனொளிபாத மலை வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது திடீரென சுகயீனமுற்றுள்ளார்.
இதனையடுத்து, வெளிநாட்டுப் பிரஜை மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொட.ர்பான மேலதிக விசாரணைகளை நல்லதண்ணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.