கழன்றுபோன கலாச்சார மண்டபம்?

by wp_fhdn

யாழ்ப்பாண கலாச்சார நிலையத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டமை தொடர்பிலான சர்ச்சைகள் உக்கிரமடைந்துள்ளது.

இந்நிலையில் தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு அவசியமான தேசிய நல்லிணக்க முயற்சிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் .அவ்வகையில், இதனுடன் நேரடியாக தொடர்புபட்டிருந்த இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கையின் தற்போதைய புத்தசாசன சமய கலாசார அலுவல்கள் அமைச்சர் மற்றும் கடற்றொழில் அமைச்சர், வடக்கு மாகாண ஆளுநர் போன்றோர் பெயர் மாற்றப்பட்டமைக்கான காரணம் தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அதேவேளை  திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையத்தின் பெயர்ப் பலகையில் தமிழ் மொழிக்கு மூன்றாவது இடம் கொடுக்கப்பட்டிருந்ததை பார்த்து தான் அதிர்ச்சியுற்றதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளுவர் கலாசார மையம் எனப் பெயர் மாற்றியது குற்றம் அல்ல. யாழ்ப்பாணத்திற்கே உரித்தான பெயர்களான யாழ். கலாசார மையம் அல்லது யாழ். பண்பாட்டு மையம் என்ற பெயர் சூட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

பெயர் சூட்டும் நிகழ்வில் திருவள்ளுவர் கலாசார மையம் என காட்சிப்படுத்தப்பட்ட இலத்திரனியல் திரையில் தமிழுக்கு மூன்றாவது இடம் வழங்கப்பட்டமை கவலை தரும் விடயமாக இருந்தது. அதனைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன் எனவும் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

எனினும் யாழ்.கலாசார மைய பெயர் மாற்றத்தின் பின்னணியில் இருக்கும் மறைகரம் எதுவெனவும் டக்ளஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்