கலைக்கப்பட்ட அமைச்சர்!

by wp_fhdn

இந்திய தூதரக அதிகாரிகளால் பெண் அமைச்சர் அவமதிக்கப்பட்டமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. 

இந்திய தூதரகம் இவ்விடயத்தினால் அல்லாட தொடங்கியுள்ளது.

மகளிர் சிறுவர் விவகார அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் தேசிய தைப்பொங்கல் விழாவில் நிகழ்வின் ஆரம்பம் முதல் முன் வரிசையில் அமர்ந்து நிகழ்வை பார்வையிட்டுக் கொண்டிருந்தார். நிகழ்வின் இடையில் வந்த இந்தியத் தூதுவர் சந்தோஸ் ஜா அவருக்கு அருகில் இருந்த கதிரையில் அமர்ந்தார்

திடீரென வந்த இந்திய தூதரக அதிகாரி ஒருவர் அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் அருகில் சென்று தூதுவருக்கு அருகில் துணைத் தூதுவர் அமர உள்ளதால் அவரை மறுபக்க கதிரையில் அமருமாறு கூற அவரும் ஆசனத்திலே இருந்து எழுந்துவிட்டார். அருகிலிருந்த அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர்களும் அந்த நொடி திகைத்து நின்றனர்.

பெண் அமைச்சர் எழும்புவதனை அவதானித்த இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா துணைத் தூதுவரிடம் கேட்க, அவரை மற்றைய பக்க கதிரைக்கு மாற்றியதாக கூற உடனடியாக துணைத் தூதுவரை அந்த இடத்திலிருந்து எழும்புமாறு கூறி் அவ் ஆசனத்திலே அமைச்சர் சாவித்திரி போல்ராஜை அமரவைத்தார்.

ஆனால் நிகழ்வின் முன்வரிசையில் அமரும் ஒரு அமைச்சரையே வேறு கதிரையில் அமருங்கள் என கூறும் அளவிற்கு ஒரு தூதரக பணியாளர்கள் அதிகாரமிக்கவர்களாக காணப்படுகின்றனரா?

ஏனைய நாடுகளிலும் இவ்வாறான அதிகாரங்கள்  தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்றதா? ஏன கேள்வி எழுப்பியுள்ளார் இளம் ஊடகவியலாளர் ஒருவர்.

தொடர்புடைய செய்திகள்