பிக்பொஸ் 8: முத்துக்குமரனுக்கு வழங்கப்பட்ட பரிசுத் தெகை எவ்வளவு தெரியுமா?

by admin

நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக் பொஸ் சீசன் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக முடிவடைந்தது. இதில்,  அதிக வாக்குகளைப் பெற்று  மேடை பேச்சாளரான முத்துக்குமரன் வெற்றியாளராகத் தெரிவுசெய்யப்பட்டார்.

பிக் பொஸ் வீட்டில் முத்துக்குமரன்  தன்னுடைய கருத்துக்களை தைரியமாக முன்வைத்து பேசும்  விதமும், அதே நேரம் தவறு செய்துவிட்டால், அதற்கு மன்னிப்பு கேட்ட விதமும் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது.

இதனால், முத்து நோமினேட் செய்யப்பட்ட போதும், மக்கள் அவருக்கு வாக்களித்து காப்பாற்றி வந்தனர்.  இதனால், 50 நாட்களை கடந்த பொழுதே முத்து தான் வெற்றியாளர் என்று பலரும் தீர்மானித்து விட்டனர்.

இதேவேளை சௌவுந்தர்யா 2வது இடத்தையும், விஜே விஷால் மூன்றாவது இடத்தையும், ரயான் 4வது இடத்தையும், பவித்ரா ஜனனி 5வது இடத்தையும் பிடித்தனர்.

இந்நிலையில் முத்துக்குமரனுக்கு பரிசாக 40 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த பணத்தை, கடன் இல்லாமல் வீடு கட்ட பயன்படுத்த தான் தீர்மானித்துள்ளதாகவும்  என முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.

மேலும் சமூகத்திற்காகவும் சில விஷயங்கள் செய்யப்போவதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.  இதுமட்டுமில்லாமல், பிக்பாஸ் வீட்டில் 100 நாட்கள் இருந்த முத்துகுமரனுக்கு சம்பளமாக 10 லட்சமும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்த சீசனில் மக்களுக்கு பெரிய வருத்தம் என்ன வென்றால்,பணப்பெட்டி டாஸ்க்கில் 2 நொடி தாமதத்தால் ஜாக்குலின் அதிரடியாக வெளியேற்றப்பட்டது தான், அவர் மட்டும் வீட்டில் இருந்து இருந்தால், நிச்சயம் அவருக்கு இரண்டாம் இடம் கிடைத்து இருக்கும் எனவும் மக்கள் கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்