சீமெந்து மூட்டைக்காக இலஞ்சம் பெற்ற பாடசாலை அதிபருக்கு விளக்கமறியல்!

by admin

முதலாம் தரத்துக்கு மாணவரை இணைத்துக் கொள்வதற்காக பத்து சீமெந்து மூட்டைகளுக்கான தொகையினை இலஞ்சமாக பெற்ற சம்பவம் தொடர்பில் கைதான பாடசாலை ஆசிரியர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பண்டாரவளை பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் இன்று (20) கொழும்பு, நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது, குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

குறித்த பாடசாலையில் மாணவர் ஒருவரை தரம் 1 இல் சேர்ப்பதற்காக, பத்து சீமெந்து மூட்டைகளுக்கான 18,520 ரூபா தொகையினை பாடசாலைக்கு முன்பாக அமைந்துள்ள வியாபாரியிடம் செலுத்துமாறு முறைப்பாட்டாளருக்கு கூறியுள்ளார்.

பணம் செலுத்தப்பட்ட நிலையில் அது தொடர்பாக அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்னெடுத்த விசாரணைக்கு அமைய பாடசாலை அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்