அஸ்வெசும இரண்டாம் கட்டம் தொடர்பில் வௌியான தகவல் ! on Monday, January 20, 2025
அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்த குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை (21) தொடங்கும் என்று நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இரண்டாம் கட்டத்திற்காக நலன்புரி நன்மைகள் சபை சுமார் 800,000 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது.
அதற்கமைய, குறித்த விண்ணப்பங்களில் இருந்து நலத்திட்ட உதவிகளைப் பெற தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும் நோக்கில், வீடு வீடாகச் சென்று இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அஸ்வெசும திட்டத்தின் முதல் கட்டத்திற்காக நலன்புரி நன்மைகள் சபை 3.4 மில்லியன் விண்ணப்பங்களைப் பெற்றது, அதில் சுமார் 1.8 மில்லியன் பேர் அஸ்வெசும நலன்புரி நன்மைகளைப் பெற தகுதியானவர்களாக தெரிவாகினர்.
இருப்பினும், நலன்புரி நன்மைகள் சபை தற்போது 1.72 மில்லியன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.