2
நடிகர் அஜித் குமாரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான ‘விடாமுயற்சி’ எதிர்வரும் பெப்ரவரி 06 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
திரைப்பட வெளியீட்டுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் விடாமுயற்சியின் இரண்டாவது சிங்கிள் பாடலான ‘பத்திக்கிச்சு’வை தயாரிப்பாளர்கள் இன்று (ஜனவரி 19) வெளியிட்டுள்ளனர்.
பாடசாலை அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து பாடியுள்ளார்.
பாடலில் யோகி சேகரின் குரலும், அமோக் பாலாஜியின் ராப் பகுதிகளும் இடம்பெற்றுள்ளன.
‘மாஸ்டர்’, ‘லியோ’, ‘வேட்டையன்’ ஆகிய படங்களில் பணியாற்றிய பாடலாசிரியர் விஷ்ணு எடவன் இந்தப் பாடலை எழுதியுள்ளார்.
மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அஜித் குமார், அர்ஜுன், த்ரிஷா, ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலர் இத் திரைப்படத்தில் நடித்துள்ளனர்.