4
யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தின் பெயர் மாற்றம் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ள நிலையில் ஊடக விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளாத இந்திய துணைத் தூதரகம் தொடர்பில் ஊடடகவியலாளர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார்.
இந்திய தூதரக அதிகாரிகள் நேற்று முன்தினம் யாழில் நடந்துகொண்ட விடயம் மற்றும் யாழ்ப்பாண கலாசார மண்டபத்தின் பெயர் மாற்றம் பற்றி விமர்சித்ததால் இந்திய துணைத் தூதரகத்தின் ஊடகவியலாளர்களுக்கான செய்தி குழுவிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றேன் என இளம் ஊடகவியலாளரான பிரபாகரன் டிலக்ஸன் தெரிவித்துள்ளார்.
இந்திய தூதரகம் தனக்கு ஆதரவான செய்திகளைத் தான் ஊடகவியலாளர்கள் எழுத வேண்டும் என நினைக்கின்றதா? ஊடக சுகந்திரம் எங்கே என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய தூதரகத்தினால் தமது செய்திகளை வழங்கவென குழுமம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.