by 9vbzz1

கொழும்பு முகத்துவாரத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது! கொழும்பு, முகத்துவாரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரச மர சந்தி பகுதியில் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு வடக்குப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர் நேற்று சனிக்கிழமை (18) கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் கொழும்பு 13ஐச் சேர்ந்த 52 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து 10 கிராம் 500 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முகத்துவாரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்