விக்டர் ஐவன் காலமானார்!

by adminDev2

“ராவய” என்ற சிங்கள வாரப்பத்திரிகையின் பிரதம ஆசிரியர் விக்டர் ஐவன் இன்று மரணமடைந்துள்ளார்

கடந்த 1971 ஆண்டு ஜேவிபியின் முதலாவது கிளர்ச்சியின் போது கொழும்பு மாவட்டத்துக்கான கிளர்ச்சிக்குழுவின் பொறுப்பாளராக செயற்பட்ட அவர் பிற்காலத்தில் ஜேவிபியுடன் சிறிது கருத்து வேறுபாடு காரணமாக அதிலிருந்து வெளியேறி சுயாதீன பத்திரிகையாளராக நீண்டகாலம் செயற்பட்டார் 

ராவய என்ற சிங்கள பத்திரிகையிலும் ஆங்கில பத்திரிகையிலும் பிரதம ஆசிரியராக நீண்ட காலம் பணியாற்றியவர்

1993 ஆம் ஆண்டு யாழ்குடா முழுமையாக புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சமயம் யாழ்ப்பணத்துக்கு விஜயம் செய்தார்

1994 – சந்திரிக்கா குமாரண துங்க ஆட்சிபீடம் ஏறுவதற்கு மிகமுக்கியமான மூளையாக செயற்பட்டவரும் இவர்தான்

தொடர்ந்து புலிகளுடன் சமாதான பேச்சுக்களை ஆரம்பிக்கவேண்டும் என்று சந்திரிக்கா அரசுக்கு அழுத்தம் கொடுத்தவர்களில் இவரும் ஒருவர். இதற்காக அக்காலப்பகுதியில் பலதடவைகள் யாழ்ப்பாணம் விஜயம் செய்து பல சந்திப்புக்ளில்  ஈடுபட்டார்.

தற்போதைய ஜேவிபி ஆட்சிக்காலத்தில் கண்டுகொள்ளப்படாத ஒருவராக அவர் மரணித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்