1
on Sunday, January 19, 2025
மட்டக்களப்பு பிராந்தியத்தில் சேவையாற்றவென புதிதாக நியமிக்கப்பட்ட 12 வைத்தியர்களின் சேவை நிலையம் குறிப்பிட்ட நியமனக்கடிதங்கள் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. ஆர். முரளீஸ்வரன் அவர்களினால் வழங்கிவைக்கட்டது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் 17.01.2025 வெள்ளிக்கிழமை அன்று பிராந்திய திட்டமிடல் வைத்திய அதிகாரிகளான Dr. எஸ். தனுஷியா மற்றும் Dr. சிறிவித்தியன் அவர்களின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இவ் நிகழ்வில், புதிய வைத்தியர்களுக்கான, மாவட்ட சுகாதார சேவையின் பற்றியதான விரிவான அறிமுக கருத்தரங்கும் பணிப்பாளர் மற்றும் பிராந்திய பொறுப்பு வைத்திய அதிகாரிகளினால் நிகழ்த்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.