மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி 2 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு !

by wamdiness

on Sunday, January 19, 2025

மட்டக்களப்பு முனைக்காட்டில் நேற்று ( 18.01.2025 ) சனிக்கிழமை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவுக்கு உட்பட்ட முனைக்காடு கிராமத்தை சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 24 வயதான இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேசன் வேலை செய்துகொண்டிருந்த குறித்த இளம் குடும்பஸ்தர், மின் இணைப்பை பெற முயற்சி செய்த வேளை, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்