2025 ஆம் ஆண்டிற்கான ஒன்பதாவது சிறந்த சுற்றுலா இடமாக இலங்கையை இங்கிலாந்தை தளமாகக் கொண்ட செய்தி நிறுவனமான பிபிசி தேர்ந்தெடுத்துள்ளது.
இது சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான நாட்டின் முயற்சிகளுக்கு மேலும் அங்கீகாரம் அளிப்பதாக அமைந்துள்ளது.
பிபிசி தனது சிறந்த 25 இடங்களின் வெற்றியாளர்களை அறிவிக்கையில், மூடுபனி படர்ந்த மலை உச்சியில் உள்ள தேயிலை தோட்டங்கள் மற்றும் அதன் பழங்கால ஆலயங்கள் வரை சுற்றித் திரியும் காட்டு யானைகள் மற்றும் நீர்ச்ச்சறுக்கு போன்ற அநேகமான பார்வையிடங்களை இலங்கை கொண்டுள்ளதாகக் கூறியது.
இந்தப் பட்டியலில் இலங்கை ஒன்பதாவது இடத்தில் உள்ளதுடன், முதல் 10 இடங்களில் உள்ள ஒரே தெற்காசிய நாடாக இலங்கை பெருமை அடைகிறது.
இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முக்கிய வருமான ஆதாரமான சுற்றுலாத் துறை, 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் கொவிட் தொற்று காரணமாக கடுமையான சரிவைச் சந்தித்தது.
எனினும், இத்தகைய பின்னணியில், நாட்டின் சுற்றுலாத் துறையை உலகளவில் மேம்படுத்துவதற்காக ஏராளமான திட்டங்கள் தொடங்கப்பட்டதன் விளைவாக, கடந்த ஆண்டில் மாத்திரம் 2 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளமையும் விசேட அம்சமாகும்.