2
இலங்கையில் ஊடகத்துறையை மேம்படுத்தும் நோக்கில் புதிய ஊடக அமைப்பு உருவாக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸா தெரிவித்தார்.
நாரஹேன்பிட்டி ஊடக அமைச்சில், ஊடகவியலாளர் சபை உறுப்பினர்களுடன் நடந்த கலந்துரையாடலில், ஊடகவியலாளர்களின் திறமைகளை மேம்படுத்தும் திட்டங்கள், 1973 ஆம் ஆண்டின் பத்திரிகைச் சட்ட திருத்தம், மற்றும் கற்றல் நெறிகள் தொடர்பில் ஆலோசிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து முன்னைய அரசாங்கங்கள் இதை மேற்கொள்ள முயன்றும் நிறைவேற்றவில்லை என்றும், புதிய அமைப்பின் மூலம் ஊடகவியலாளர்களின் கல்வித் தரம், ஒழுக்க நெறிகள், மற்றும் தொழில்திறன் மேம்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.