ஸ்பெயினில் உள்ள பனிச்சறுக்கு விடுதியில் நாற்காலி லிப்ட் விபத்துக்குள்ளானதில் இரண்டு பெண்கள் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் நடந்த ஸ்பெயின் பைரனீஸில் உள்ள அஸ்டன் ரிசார்ட், மீட்புப் பணிகள் சம்பவ இடத்திற்குச் சென்றதால் மூடப்பட்டது.
ஒரு கப்பி செயலிழந்ததால் ஒரு கேபிள் தளர்ந்து சில நாற்காலிகள் தரையில் விழுந்து, பனிச்சறுக்கு வீரர்களை கீழே பனியில் வீசியது.
30 பேர் காயமடைந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் உள்ளூர் ஊடகங்கள் 17 பேருக்கு மருத்துவ உதவி தேவை என்று பின்னர் செய்தி வெளியிட்டது.
நோயாளர்காவு வண்டிகள் மற்றும் உலங்கு வானூர்திகள் காயமடைந்த சிலரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றன. 18 வயதுடைய இரண்டு பெண்கள் தீவிர சிகிச்சையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
நாற்காலியின் ஒரு முனையில் ஒரு கப்பி தளர்வானது மற்றும் அதை ஆதரிக்கும் கட்டமைப்பின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால் ஒரு கேபிள் தளர்ந்ததால் பல இருக்கைகள் விழுந்தன .
15 மீ உயரம் (50 அடி) நாற்காலியில் தொங்கிக் கொண்டிருந்த டஜன் கணக்கானவர்கள் கீழே இறக்கிவிடப்பட்டனர்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தொலைபேசி இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.