4
ஆதீரா Sunday, January 19, 2025 யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணத்தில் சுமார் 20 இலட்ச ரூபாய் பெறுமதியான திமிங்கலத்தின் ஆம்பரையுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், குருநகர் பகுதியை சேர்ந்த 58 வயதான நபர் ஒருவர் 465 கிராம் ஆம்பருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.