சேனாநாயக்க சமுத்திரத்தின் 5 வான் கதவுகள் திறப்பு!

by wamdiness

கடும் மழை காரணமாக சேனாநாயக்க சமுத்திரத்தின் ஐந்து வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதன்படி, 5 வான் கதவுகளை தலா 6 அங்குலம் வீதம் திறக்கவும், ஒரு மணித்தியாலத்தின் பின்னர் திறப்புகளை 12 அங்குலமாக அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே, சேனநாயக்க சமுத்திரத்தைச் சூழவுள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, 2025 ஜனவரி 21 ஆம் திகதி காலை 7.30 மணி வரை அமுலுக்கு வரும் வகையில், மகாவலி ஆற்றுப் படுகையின் பல தாழ்வான பகுதிகளுக்கு நீர்ப்பாசனத் திணைக்களம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்