3
மாத்தறை பகுதியில் 900 மில்லி கிராம் ஹெரோயின், உள்நாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் இருவர் நேற்று வெள்ளிக்கிழமை மாத்தறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் முன்னதாக பொக்குனுஹேன பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது கிடைக்க பெற்ற தகவல்களின் அடிப்படையில் மாத்தறை, வெவஹமந்துவ பகுதியில் உள்ள வீடொன்று பொலிஸாரால் சோதனையிடப்பட்டது.
இதன்போது, வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த T56 ரக துப்பாக்கி, இரண்டு மெகசின்கள் மற்றும் 60 தோட்டாக்களுடன் மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.