சம்மாந்துறையில் மதுபோதையில் வாகனம் செலுத்திய இருவர் கைது !

by wamdiness

சம்மாந்துறையில் மதுபோதையில் வாகனம் செலுத்திய இருவர் கைது ! on Saturday, January 18, 2025

( தில்சாத் பர்வீஸ் )

மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்தோடு மோட்டார் சைக்கிளையும் சம்மாந்துறை போக்குவரத்து பிரிவினர் கைப்பற்றி உள்ளனர்.

இச்சம்பவம் நேற்று (16) வியாழக்கிழமை இரவு 09.30 மணியளவில் நடைபெற்றுள்ளது.

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஜீட்புரம் சந்தியில் மதுபோதையில் நேற்று (16) வியாழக்கிழமை இரவு 09.30 மணியளவில் சம்மாந்துறை போக்குவரத்து பிரிவினரினால் குறித்த இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

சம்மாந்துறை போக்குவரத்து பிரிவினர் மஜீட்புரம் சந்தியில் கடமையில் இருந்த வேளை சந்தேகத்திற்கிடமான சென்ற மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்த சம்மாந்துறை போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் குறித்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி மேற்கொண்ட பரிசோதனை நடவடிக்கைகளின் போது சடந்தலாவை பகுதியைச் சேர்ந்த 54 வயது மற்றும் மஜீட்புரம், மல்வத்தை 03 பகுதியைச் சேர்ந்த 49 வயதினைச் சேர்ந்த இரு சந்தேக நபர்களும் மதுபோதையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதான சந்தேக நபர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களை சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஒப்படைத்த போது ரூபா 35,000 படி இரண்டு சந்தேக நபர்களுக்கும் தண்டப்பணம் அறவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், குறித்த சோதனை நடவடிக்கையானது சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம்.நௌபரின் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பதில் பொறுப்பதிகாரி ஏ. நஸார் தலைமையிலான குழுவினரினால் இச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்