by adminDev

“ஈரோடு கிழக்கில் பெரியாரை விமர்சித்து சீமான் வாக்கு கேட்டால் தெரியும்?” – ப.சிதம்பரம் “பெரியார் சமூக இழிவுகளை எதிர்த்தார். அதில் வெற்றியும் கண்டார். இன்றும் சமூக இழிவுகளை எதிர்ப்பதுதான் பெரியார் கொள்கை. ஈரோடு இடைத்தேர்தலில் பெரியாரை சீமான் விமர்சித்து வாக்குகளை கேட்டால் தெரியும்? ஆரியர்கள் அல்லாத ஓர் இனம்தான் திராவிடம். தமிழர்கள், கன்னடர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் சேர்ந்தது தான் அது. ஐந்து மாநிலங்களின் ஒற்றுமையை குறிக்கிறது.திராவிடன் என்று சொல்வது தமிழர்களின் விரிந்த பார்வையை காட்டுகிறது,” என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “அழகப்பா பல்கலைக்கழகத்தில் முதல்வர் திறக்க உள்ள வளர் தமிழ் நூலகத்தில் 2025-ம் ஆண்டுக்குள் 80,000 நூல்களை வைப்பதே லட்சியம். நூல்கள் அன்பளிப்பை வரவேற்கிறோம். திருவள்ளுவர் உடையை காவியாக மாற்றியது வருத்தமளிக்கிறது. ஆளுநரை கண்டித்து பார்க்கிறோம். ஆனால், அவர் தமிழக வரலாறு, பண்பாடு, திருவள்ளுவர் வரலாறு தெரியாமல் தொடர்ந்து பிழையை செய்து வருகிறார்.

தமிழக அரசுடனான ஆளுநரின் முரண்பாட்டை ஒரு வாரத்தில் தீர்க்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றமே தெரிவித்துவிட்டது. அரசியல் சாசன விதிகள் படி நடந்து கொள்வார் என்று நம்புகிறோம். அயோத்தி ராமர் கோயில் திறப்பு நாளே உண்மையான சுதந்திரம் கிடைத்த நாள் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியதை கண்டிக்கிறோம்.

பெரியார் சமூக இழிவுகளை எதிர்த்தார். அதில் வெற்றியும் கண்டார். இன்றும் சமூக இழிவுகளை எதிர்ப்பதுதான் பெரியார் கொள்கை. ஈரோடு இடைத்தேர்தலில் பெரியாரை சீமான் விமர்சித்து வாக்குகளை கேட்டால் தெரியும்? ஆரியர்கள் அல்லாத ஓர் இனம்தான் திராவிடம். தமிழர்கள், கன்னடர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் சேர்ந்தது தான் அது. ஐந்து மாநிலங்களின் ஒற்றுமையை குறிக்கிறது.

திராவிடன் என்று சொல்வது தமிழர்களின் விரிந்த பார்வையை காட்டுகிறது. திராவிட மாடல் என்று சொல்லவது தவறில்லை.திராவிடம் என்று சொல்லவதால் தமிழன் பெருமை குறைவதாக கூறுவது தவறு. தேசீய கீதத்திலேயே திராவிடம் வருகிறது. தமிழகத்தில் மது விற்பனை கூடிவிட்டதில் வருத்தப்படுகிறேன். பல மாநிலங்கள் மதுபானங்களின் ஆயத்தீர்வையை நம்பி தான் உள்ளன.

இலங்கை அதிபரை சந்தேகப்பட தேவையில்லை. நம்மோடு நல்ல உறவில் உள்ளார். இலங்கைக்கு துன்பம் என்றால் இந்தியா தான் உதவ முடியும் என்பதை அறிந்துள்ளார். இண்டியா கூட்டணிக்கு தவெக வந்தால் நல்லது தான்.” என்று ப.சிதம்பரம் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்