by smngrx01

பரீட்சையால் பல ரயில் சேவைகள் இரத்து இன்று (18) சுமார் 12 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறுகிய தூர சேவைகளின் கீழ் கொழும்பு கோட்டை நோக்கி இயங்கும் ஆறு ரயில்களும், கோட்டையில் இருந்து புறப்படவிருந்த ஆறு ரயில்களுமே இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளன.

இருப்பினும், இன்று அலுவலக நாள் இல்லாததால், மாலை வேளையில் இயங்கும் ரயில்கள் சேவைகள் ரத்து செய்யப்படாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ரயில் சாரதிகளின் பற்றாக்குறை காரணமாக, நேற்று (17) சுமார் 25 ரயில்கள் இரத்து செய்யப்பட்டன.

தரம் 2 இலிருந்து தரம் 1 க்கு மேம்படுத்துவதற்கான பரீட்சைக்கு சாரதிகள் தயாராகி வருவதால் இவ்வாறு ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்