1
மட்டக்களப்பு பாசிக்குடா சுற்றுலா விடுதியில் குடும்பஸ்தர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு ! on Saturday, January 18, 2025
மட்டக்களப்பு பாசிக்குடாவில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் பெண்ணுடன் தங்கியிருந்த குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (17) மாலை குறித்த தங்குமிடத்திற்கு குடும்பஸ்தரும் பெண்ணும் வந்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மரணமடைந்தவர் ஓட்டமாவடியை சேர்ந்த 45 வயதுடையவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய காரணங்களை கண்டறிவதற்காக கல்குடா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.