பெண் வைத்தியர் கொலை – தீர்ப்பு ஒத்திவைப்பு

by wamdiness

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு வைத்தியசாலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் திகதி பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார்.

நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இவ்வழக்கு, சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டது. கொல்கத்தாவில் உள்ள சியால்டா கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. இதில் 50 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இந்த விசாரணை அனைத்தும் கடந்த 9-ஆம் திகதி நிறைவடைந்தது.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என சி.பி.ஐ. தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது குற்றம்சாட்டப்பட்ட சஞ்சய் ராய் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், தண்டனை விவரம் நாளை மறுநாள் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்