புங்குடுதீவில் குளத்தில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

by adminDev

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் உள்ள குளம் ஒன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அப்பகுதியை சேர்ந்த 38 வயதுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

கடந்த இரு தினங்களுக்கு முன்பாக வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பாத நிலையில் , அவரை உறவினர்கள் தேடி வந்தனர்.

இந்நிலையில் , இன்றைய தினம் சனிக்கிழமை குறித்த நபர் அப்பகுதியில் உள்ள குளம் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த குளத்திற்கு அருகில் அவரது துவிச்சக்கர வண்டி , மற்றும் ஆவணங்கள் என்பவை மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்