பயங்கரவாத தடைச்சட்டத்தை நீடிக்க அரசு சதி?

by adminDev2

அறுகம்பேவில் விடுதலை புலிகள் அமைச்சில் இருந்து பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி  சிறையில் இருக்கும் முன்னாள் போராளி ஒருவரின் ஊடாக  தாக்குதலை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பயங்கரவாத விசாரணை பிரிவு கூறியுள்ளது. 

எனினும் இதன் ஊடாக பயங்கரவாத தடைச்சட்டத்தை நீடிக்க அரசு சதி செய்வதாக சந்தேகிக்கப்படுகின்றது.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே பயங்கரவாத விசாரணை பிரிவு, இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

சுன்னாகத்தை சேர்ந்த முன்னாள் போராளியொருவர் உட்பட கைது நடந்துள்ளது.கைதானவர்கள் ஒரே காலப்பகுதியில் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவராவர்

அறுகம்பே விவகாரத்துடன் தொடர்புடைய 7 பேர் கைதுசெய்யப்பட்டு 90 தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு அவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்