செங்கலடி மத்திய கல்லூரியின் 150வது ஆண்டையொட்டி இரத்ததான முகாம்!

by adminDev

on Saturday, January 18, 2025

மட்டக்களப்பு கல்குடா கல்வி வலையத்திற்குட்பட்ட செங்கலடி மத்திய கல்லூரியின் 150வது ஆண்டையொட்டி இரத்ததான முகாம் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

செங்கலடி மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற  இவ் இரத்ததான நிகழ்வானது, அதிபர் க.சுவர்ணேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

 
மட்டக்கப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப்பிரிவின் வைத்தியர் ஜீ.சுகண்யா தலைமையிலான வைத்திய குழாம் இதற்கான முழு ஆதரவை வழங்கியிருந்ததுடன், பாடசாலையின் பழைய மாணவர்களான குருதிக் கொடையாளர்களிடமிருந்து குருதிகளைப் பெற்றுக்கொண்டனர்.

 
இதே வேளை பாடசாலையின் 150வது ஆண்டையொட்டி இடம்பெறும் இந் நிகழ்விற்கு அதிகமான பழைய மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றதையும் காணக்கூடியதாகவிருந்து.

மேலும் இன்று 18ம் திகதி இடம்பெற்ற இரத்ததானத்தின் தொடர்ச்சி எதிர்வரும் 25ம் திகதியும் பாடசாலையில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்