காரைதீவு மாவடிப்பள்ளி பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்தும் நபர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்னிலையில் மது போதையில் வாகனம் செலுத்துபவர்கள் , தலைகவசம் அணியாதவர்கள் மற்றும் வாகன அனுமதி பத்திரம் இல்லாமல் மோட்டார் சைக்கிள்களை செலுத்துபவர் உள்ளிட்டவர்களை காரைதீவு பொலிஸ் நிலையத்தால் கைது செய்யப்பட்டனர் என காரைதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர். எஸ். ஜெகத் தெரிவித்தார்.
மேலும், மோட்டார் சைக்கிள்களில் சாகசங்கள் செய்தல், பாடசாலை மாணவர்களுக்கு இடையுறு ஏற்படுத்தும் இளம் வயது மாணவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அண்மையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு பெண்கள் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதால், மக்களின் பாதுகாப்பிற்காக மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.