மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ; இருவர் கைது !

by wp_fhdn

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ; இருவர் கைது ! on Friday, January 17, 2025

கல்கிசை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இரத்மலானை பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றிலிருந்து இரண்டு பெண்கள் நேற்று வியாழக்கிழமை ( 16) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்தனர்.

கல்கிசை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் மசாஜ் நிலையத்தின் பெண் உரிமையாளரும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்கிசை மற்றும் தொடங்கொடை ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 30 மற்றும் 47 வயதுடைய இரண்டு பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்