3
88 வயதுடைய போப்பாண்டவர் போப் பிரான்சிஸ் அவர்கள் நேற்று வியாழக்கிழமை வழமையான பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது தவறுதலாக கீழே விழுந்தார். இதனால் அவருக்கு எந்தவொரு எலும்பு முறிவும் ஏற்படவில்லை. அவரது வலது முழங்கையில் காயம் ஏற்பட்டது. தற்போது காயத்திற்கு கட்டுப்போடப்பட்டுள்ளது என வத்திக்கான செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
கடந்த 6 வாரங்களில் போப்பாண்டவர் இரண்டு முறை தவறி விழுந்து காயங்களுக்கு உள்ளாகியிருக்கிறார். கடந்த டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி தனது படுக்கையறையில் தவறி விழுந்ததில் அவரின் கன்னத்தில் காயம் ஏற்பட்டது. ஏற்கவே முழங்கால் பிரச்சினையால் அவர் சக்கரநாற்காலியில் இருந்தே நடமாடிவருகிறார்.