by adminDev2

டி-56 துப்பாக்கி உட்பட மேலும் சில உபகரணங்களுடன் சந்தேக நபர் ஒருவர் மேல் மாகாண குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவியுடன் நேற்று (16) காலை கைது செய்யப்பட்டார்.

இராணுவ பொலிஸ் விசேட விசாரணை பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, இராணுவத்தினருடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் டி-56 மார்க் துப்பாக்கி ஒன்றும், வெற்று மெகசின் ஒன்றும் மற்றும் 18 7.62 x 39 மிமீ தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வெலிகந்த, ருஹுணுகெத்த பகுதியில் வசிக்கும் 53 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இராணுவ பொலிஸ் விஷேட புலனாய்வுப் பிரிவினர் மற்றும்  மேற்கு மாகாண குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்