by smngrx01

’கே டு சிட்’ஐ தடுப்பதற்கு பணிப்புரை இளைஞர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தை இலக்காகக் கொண்ட செயற்கை கஞ்சா அல்லது “கே டு சிட்” போதைப்பொருளை தடுப்பதற்கு அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவித்து நடவடிக்கை எடுக்குமாறு, பொலிஸ் மா அதிபர்கள் பொலிஸ் நிலையங்களுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கஞ்சா உடலில் மிகவும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதாகவும், மக்களை மனதளவில் மிகவும் குழப்பமடையச் செய்வதாகவும் கூறப்படுகிறது.

இதன்படி, பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு இட்டுச்செல்லக்கூடிய மக்கள் மற்றும் இடங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு, பொலிஸ் மா அதிபர்கள் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் பிரிவுகளுக்கும் அறிவித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்