வெலிகந்த பகுதியில் டி-56 ரக துப்பாக்கியுடன் முதியவர் கைது!

by wp_shnn

வெலிகந்த, ருஹுணுகெத்த பகுதியில்  இராணுவத்தினருடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் டி-56 மார்க் 1 துப்பாக்கி,வெற்று மெகசின் மற்றும்  தோட்டாக்களுடன் 53 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் நேற்று, மேல்  மாகாண குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவ பொலிஸ் விஷேட புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த தகவலின்  அடிப்படையில் இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இராணுவ பொலிஸ் விஷேட புலனாய்வுப் பிரிவினர் மற்றும் மேற்கு மாகாண குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்