2
பிரித்தானியாவின் லண்டன் நகரத்தில் 14 வயதுச் சிறுவனைப் பேருந்தில் வைத்து கத்தியால் குத்திக் கொலை செய்த குற்றச்சாட்டில் 15 மற்றும் 16 வயதுடைய இரு சிறுவர்களை அந்நாட்டுப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
அதேவேளை கடந்த ஆண்டு (2024) லண்டனில் 10 பதின்ம வயதுச் சிறுவர்கள் கத்திக்குத்துத் தாக்குதல்களால் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நீதித்துறை அமைச்சு அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் கடந்த 2017ஆம் ஆண்டு 10 முதல் 17 வயதுடைய 27,000 பதின்ம வயதுச் சிறுவர்கள் குண்டர் கும்பல்களில் உறுப்பினர்களாக இருந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.