சர்வதேச ‘கோ கோ’ கூட்டமைப்பு சார்பில் முதல் முறையாக ‘கோ கோ’ உலக கோப்பையானது இவ்வாண்டு நடத்தப்படுகிறது.
கோ கோ உலகக்கோப்பையின் முதல் பருவகாலப் போட்டிகள் யாவும் இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெற்றுவருகிறது. 1936ம் ஆண்டு பேர்லின் ஒலிம்பிக் போட்டிகளின் போது கபடி மற்றும் மல்லகம்ப் போன்ற பிற பூர்வீக இந்திய விளையாட்டுக்களுடன் கோகோ விளையாட்டும் அடையாளப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மொத்தம் 23 நாடுகள் பங்கேற்கும் கோ கோ உலகக்கோப்பையில், 20 ஆண்கள் அணிகள் மற்றும் 19 பெண்கள் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
மொத்தமுள்ள 20 ஆண்கள் அணிகள், 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்று போட்டிகளில் விளையாடி வருகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், காலிறுதி சுற்றுக்கு முன்னேறும். அதனைத்தொடர்ந்து காலிறுதி போட்டிகள், அரையிறுதி போட்டிகள் என நடைபெற்று இறுதிப்போட்டியானது ஜனவரி 19ம் திகதி நடைபெறவுள்ளது.
ஆண்கள் பிரிவில் இலங்கை அணி , குழு ‘சியில் இடம்பெற்றுள்ளது. அதில் பங்களாதேஷ், தென்கொரியா, அமெரிக்கா, போலாந்து அணிகள் இடம்பெற்றுள்ளதுடன். இந்திய அணி, குழு ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. அதில் நேபாளம், பெரு, பிரேசில், பூடான் முதலிய அணிகளுடனும், பெண்கள் பிரிவில் இலங்கை அணியில் நேபாளம், பங்களாதேஷ், பூட்டான், ஜேர்மனி அணிகளும் இந்திய பெண்கள் அணியின் குழு ஏ பிரிவில் ஈரான், மலேசியா, கொரியா குடியரசு முதலிய அணிகளும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.