மீண்டும் தவறி விழுந்த போப் பிரான்சிஸ்!

by wp_fhdn

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ்  ஒன்றரை மாதங்களில் 2-வது முறையாக தவறி விழுந்து காயமடைந்துள்ளார்.

88 வயதான போப் பிரான்சிஸ் முதுமை காரணமாக பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறார்.

இதனால் பெரும்பாலும் சக்கர நாற்காலியை பயன்படுத்தி வருகிறார். கடந்த மாதம் 7ஆம் திகதி தனது படுக்கை அறையில் தவறி விழுந்ததில் அவரது கன்னத்தில் லேசான காயம் ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தபோது போப் பிரான்சிஸ் தவறி விழுந்தார். இதில் அவரது கையில் காயம் ஏற்பட்டது. கையில் எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை என்றும், எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காயம் ஏற்பட்ட பகுதியில் சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பதாகவும் வத்திகான்  செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

ஒன்றரை மாதங்களில் 2-வது முறையாக போப்பாண்டவர் தவறி விழுந்து காயமடைந்திருப்பது கிறிஸ்தவர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்